ரூ.1,643 கோடியில் வளர்ச்சி பணிகள்: மாண்டியாவில் முதல்வர் இன்று துவக்கம்
ரூ.1,643 கோடியில் வளர்ச்சி பணிகள்: மாண்டியாவில் முதல்வர் இன்று துவக்கம்
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 09:24 PM

மாண்டியா: மாண்டியாவில், 1,643 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும், 40 வளர்ச்சி பணிகள் திட்டத்தை, முதல்வர் சிவகுமார் இன்று துவக்கி வைக்கிறார்.
மாண்டியா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடக்கும் அரசு நிகழ்ச்சியில், மாண்டியா மாவட்டத்தில், 1,643 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும், 40 வளர்ச்சி பணிகளுக்கான திட்டத்தை, முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார்.
ஏற்கனவே, 149 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட, 17 பணிகளையும் அவர் திறந்து வைத்து, பல்வேறு அரசு திட்டங்களின் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சலுகைகள் வழங்குகிறார்.
முதல்வரான பின், முதல்முறையாக சிவகுமார் மாண்டியாவுக்கு வருவதால், அவரை வரவேற்கும் விதமாக நகர் முழுதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், ஏழில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒரு தொகுதி ம.ஜ.த.,விடம் உள்ளது. ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், லோக்சபா தேர்தலில் காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை.
இங்கு வெற்றி பெற்ற குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக உள்ளார். அவரது செல்வாக்கை குறைக்கும் வகையில், மாண்டியாவில், 1,643 கோடி செலவில் முதல்வர் வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
