ADDED : செப் 05, 2025 11:11 PM

பொதுவாக பிரெட் என்றால், சாண்ட்விச், டோஸ்ட் என நினைவுக்கு வரும். பிரெட்டில் பல விதமான சிற்றுண்டிகள் தயாரிக்கலாம். இவற்றில் பிரெட் உப்புமாவும் ஒன்றாகும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
செய்முறை முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, சீரகத்தை போடவும். அதன்பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
இந்த கலவையில் தக்காளி, மஞ்சள் துாள், உப்பு சேர்க்கவும். பொன்னிறமானதும் சிறிதாக நறுக்கிய பிரெட் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடம் வேக வைத்தால், சுவையான பிரெட் உப்புமா தயார். இதை தயாரிக்க 15 நிமிடங்கள் போதும்.
அவசர நேரத்தில் நான்கு பிரெட் துண்டுகள் இருந்தால், சட்டென உப்புமா செய்யலாம். ரவை உப்புமாவை விட மாறுபட்ட சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
- நமது நிருபர் -