/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., - அலிபூர்துவார் சிறப்பு ரயில் இயக்கம்
/
பெங்., - அலிபூர்துவார் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஏப் 21, 2026 02:45 AM
பெங்களூரு: பெங்களூரில் இருந்து அலிபூர்துவாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
கோடை கால பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம், அலிபூர்துவாருக்கு 22ம் தேதி சிறப்பு ரயில் - 06279 இயக்கப்படுகிறது.
காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில், 24ம் தேதி மதியம் 1:50 மணிக்கு அலிபூர்துவார் சென்றடையும்.
எலஹங்கா, ஹிந்துபூர், தர்மாவரம், அதானி, நந்தியால், குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பாலசா, குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ராக், கராக்பூர், தன்குனி, போல்பூர் சாந்திநிகேதன், ராம்பூர் ஹால்ட், மால்டா டவுன், பர்சோய், கிஷன்கஞ்ச், ஜபல்குரி, சிலிகுரி, ஹசிமரா நிலையங்களில் ரயில் நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

