பெங்., - அசோகபுரம் மெமு ரயில் இன்று பகுதியாக ரத்து
பெங்., - அசோகபுரம் மெமு ரயில் இன்று பகுதியாக ரத்து
ADDED : மார் 21, 2026 05:42 AM
பெங்களூரு: பராமரிப்பு பணி காரணமாக, பெங்களூரில் இருந்து மைசூரு அசோகபுரம் வரை செல்லும், மெமு ரயில் இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மைசூரு - நாகனஹள்ளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, மைசூரு அசோகபுரம் வரை செல்லும் மெமு ரயில் - 66579, மார்ச் 21ம் தேதியான இன்று, வரும் 25ம் தேதி, அடுத்த மாதம் 10, 15ம் தேதிகளில், மாண்டியாவின் பாண்டவபுரா வரை மட்டுமே செல்லும். மேற்கண்ட தேதிகளில் மறுமார்க்கமாக பாண்டவபுராவில் இருந்து ரயில் புற ப்படும்.
இதேபோல பாகல்கோட்டின் அலமாட்டி முதல் வாண்டல் ரயில் நிலையம் வரை, தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் வரும் 23, 24 ம் தேதிகளில் யஷ்வந்த்பூர் - விஜயபுரா எக்ஸ்பிரஸ் 16547, பாகல்கோட் வரை மட்டுமே செல்லும். வரும் 23, 24ம் தேதிகளில் மைசூரு - பாகல்கோட் பசவா எக்ஸ்பிரஸ் விஜயபுரா வரை மட்டும் செல்லும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
