/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : ஜூலை 31, 2025 07:56 AM
பெங்களூரு : ''பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 06523: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு விரைவு ரயில், ஆக., 11 முதல் 15ம் தேதி வரை, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06524: திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், ஆக., 12 முதல் 16ம் தேதி வரை, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும்.
ர யில் எண் 06547: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு விரைவு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆக., 13, 27, செப்., 3ம் தேதிகளில் இரவு 7:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06548: திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், திருவனந்தபரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து ஆக., 14, 28, செப்., 4ம் தேதிகளில் மதியம் 3:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில்கள் இரு மார்க்கங்களிலும் கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட், சேலம், ஈரோடு, திருப்பூர், போதனுார், பாலக்காட், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சன்கனசேரி, திருவல்லா, சென்கன்னுார், மாவேலிகரா, கயன்குலம், கொல்லம், வார்காலா சிவகிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.