தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்., கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

 பெங்., கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

 பெங்., கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் நாளை இயக்கம்


ADDED : செப் 09, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பெங்களூரு கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல்; பெங்களூரு - பெலகாவி; யஷ்வந்த்பூர் - விஜயபுரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எண் 06591: பெங்களூரு கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், செப்., 11, 12ம் தேதிகளில் காலை 7:30 மணிக்கு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 3:00 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் எண் 06588: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு ரயில், செப்., 11, 12ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.

ரயில் எண் 06563: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெலகாவி விரைவு ரயில், வரும் 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 மணிக்கு பெலகாவி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் எண் 06564: பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில், வரும் 12ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும்.

எண் 06583: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெலகாவி விரைவு ரயில், வரும் 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 மணிக்கு பெலகாவி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06584: பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில், வரும் 14ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

ரயில் எண் 06561: யஷ்வந்த்பூர் - விஜயபுரா விரைவு ரயில், 11, 13ம் தேதிகளில் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு விஜயபுரா சென்றடையும்.

மறுமார்கத்தில் எண் 06562: விஜயபுரா - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் விஜயபுராவில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us