/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., - ஹூப்பள்ளி விமானம் 30ல் துவக்கம்
/
பெங்., - ஹூப்பள்ளி விமானம் 30ல் துவக்கம்
ADDED : மார் 24, 2025 05:02 AM
பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு மார்ச் 30ம் தேதி முதல் மற்றொரு விமானம் தினமும் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, புதுடில்லியில் நேற்று இண்டிகோ விமான நிறுவனத்துடன், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆலோசனை நடத்தினார். இதில், பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு தினமும் மூன்று விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதேவேளையில், ஹூப்பள்ளியில் இருந்து ஆமதாபாத்துக்கும் விமானத்தை இயக்கும்படி, அந்நிறுவனத்திடம் அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். இதன் மூலம் கர்நாடகாவின் வட மாவட்ட மக்கள் பயனடைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மார்ச் 30ம் தேதி பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு '6இ7056' விமானம், காலை 9:55 மணிக்கு புறப்பட்டு, 11:20 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஹூப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு '6இ7263' விமானம், காலை 11:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:20 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.- நமது நிருபர் -