/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி விலை 15 சதவீதம் உயர்த்த பெங்., ஹோட்டல்கள் முடிவு
/
காபி விலை 15 சதவீதம் உயர்த்த பெங்., ஹோட்டல்கள் முடிவு
காபி விலை 15 சதவீதம் உயர்த்த பெங்., ஹோட்டல்கள் முடிவு
காபி விலை 15 சதவீதம் உயர்த்த பெங்., ஹோட்டல்கள் முடிவு
ADDED : பிப் 21, 2025 05:20 AM
பெங்களூரு: மெட்ரோ ரயில் கட்டண உயர்வால் ஷாக் ஆகி உள்ள நகர மக்கள், வரும் நாட்களில் காபிக்கும் அதிக கட்டண செலுத்த வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.
பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம், காபியின் விலையை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, சங்க தலைவர் ராவ் கூறியதாவது:
பெங்களூரு நகரம் பில்டர் காபிக்கு பெயர் பெற்றதாகும். எனவே வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தந்து கொண்டிருக்கிறோம். காபி கொட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நடப்பாண்டு ஜனவரி முதல் காபி கொட்டைகளும், பவுடர்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காபி பவுடர் விலை மார்ச்சில் 200 ரூபாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் நடத்தும் ஹோட்டல்களில், 10 முதல் 15 சதவீதம் உயர்த்த கூறி உள்ளோம்.
ஹோட்டல்களின் அந்தஸ்துக்கு ஏற்ப குறைந்தபட்சம் 12 ரூபாய் இருந்து 40 ரூபாய் வரை உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. வேறு வழியின்றி கட்டணத்தை உயர்த்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.