/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்., - கான்பூர் சிறப்பு ரயில்
/
கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்., - கான்பூர் சிறப்பு ரயில்
கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்., - கான்பூர் சிறப்பு ரயில்
கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்., - கான்பூர் சிறப்பு ரயில்
ADDED : ஏப் 04, 2026 04:44 AM
பெங்களூரு: கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பெங்களூரு - கான்பூர் இடையே சிறப்பு ரயில் இயங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயங்கப்பட உள்ளது.
வரும் 5, 12ம் தேதிகளில் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை, 4:30க்கு புறப்படும் ரயில் - 04131, எஸ்.எம்.வி.டி.,க்கு, 7, 14ம் தேதிகளில், மாலை 6:30 மணிக்கு வந்து சேரும்.
எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து, 8, 15ம் தேதிகளில் காலை, 7:10க்கு புறப்படும் ரயில் - 04132 வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை, 3:45 மணிக்கு கான்பூர் செல்லும். இருமார்க்கமாக பதேபூர், பிரயாக்ராஜ் சந்திப்பு, சங்கர்கார்க், தபௌரா, மாணிக்பூர், சட்னா, கட்னி, மடன், மஹால், இடர்சி, நாக்பூர், பாலசோர், சிர்பூர் காஜாநகர், பெல்லம்பள்ளி, மஞ்சிர்யால், வாராங்கல், கம்மம், விஜயவாடா, சிரலா, ஓங்கோல், நெல்லுார், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட், பங்கார்பேட், கே.ஆர்.புரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

