பெங்., குடிநீர் வாரியத்தின் வரி உயர்வுக்கு கண்டனம்
பெங்., குடிநீர் வாரியத்தின் வரி உயர்வுக்கு கண்டனம்
ADDED : மார் 26, 2026 12:47 AM

பெங்களூரு: 'பெங்களூரு குடிநீர் வாரியம், சுகாதார வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என பெங்களூரு மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என்.ஆர்.ரமே ஷ் கூறி உள்ளார்.
அவரது அறிக்கை:
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தில், கடந்த ஆண்டுகளில் சுகாதார வரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2024 டிசம்பரில் 25 சதவீதமாக இருந்த சுகாதார வரி, கடந்த ஜனவரியில் 31.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அடுத்த மாதம் மேலும் வரி உயர உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை வரி உயர்த்துவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 3 சதவீதம் வரி உயர்த்தப்பட்டு வருகிறது.
பெங்களூரில் வசிக்கும் 75 சதவீத மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தங்களின் சம்பள பணத்தை குடிநீர் வாரியம், பெஸ்காம், ஜி.பி.ஏ., ஆகியவற்றுக்கே செலவிட வேண்டி இருக்கிறது. வரி உயர்வை குடிநீர் வாரியம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
