கண்ணில் மிளகாய் பொடி வீசி ரூ.7.50 லட்சம் பறித்தோர் கைது
கண்ணில் மிளகாய் பொடி வீசி ரூ.7.50 லட்சம் பறித்தோர் கைது
ADDED : மே 15, 2026 03:47 AM

சிக்கபல்லாபூர்: கண்ணில் மிளகாய் பொடி வீசி, 7.50 லட்சம் ரூபாயை பறித்து சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார் விநாயக் நகரை சேர்ந்தவர் சிவசங்கர், 42, இவர், நேற்று மதியம் பணத்துடன் கார் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், முகவரி கேட்பது போல அவரி டம் பேச்சு கொடுத்தனர்.
அவரும் நின்று அவர்களுடன் பேசினார். அப்போது, திடீரென பைக்கில் வந்த நபர்கள், சிவசங்கரின் கண்களில் மிளகாய் பொடியை துாவினர்.
தடுமாறிய அவரது கையில் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றனர். அப்போது, அவர் திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். இருப்பினும், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து, கவுரிபிதனுார் போலீசார் விசாரித்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடர்களின் வாகன எண்கள், அவர்களின் முகங்களை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, பெங்களூரு நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த திருடர்கள் யஷ்வந்த், பரத், தர்ஷன், விசாகாந்த் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிய 7.50 லட்சம் ரூபாயை முழுவதுமாக மீட்டனர்.
