/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காவிரி குடிநீர் இணைப்பு ஆர்வம் காட்டாத மக்கள்
/
காவிரி குடிநீர் இணைப்பு ஆர்வம் காட்டாத மக்கள்
ADDED : ஜூலை 31, 2025 10:56 PM
பெங்களூரு: பெங்களூரு புறநகரின், 110 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் துவக்கி, ஓராண்டு நெருங்குகிறது. ஆனால் பொது மக்கள் காவிரி நீர் இணைப்பு பெறுவதில், ஆர்வம் காட்டவில்லை.
மாநில அரசு, பெங்களூரு புறநகரில் உள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் நோக்கில், 5,000 கோடி ரூபாய் செலவில், காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தியது. 2024 அக்டோபரில் குடிநீர் விநியோகம் துவங்கியது. 110 கிராமங்களின் ஐந்து லட்சம் வீடுகளுக்கு காவிரி குடிநீர் இணைப்பு ஏற்படுத்த, குடிநீர் வாரியம் இலக்கு நிர்ணயித்தது.
ஆனால் திட்டம் துவங்கி, ஓராண்டு நெருங்கியும் காவிரி குடிநீர் இணைப்பு பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதுவரை 70,000 பேர் மட்டுமே, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். எதிர்பார்த்த அளவில் குடிநீர் இணைப்பு பெறாததால், தினமும் 750 எம்.எல்.டி.,க்கு பதிலாக, 400 எம்.எல்.டி., தண்ணீர் மட்டும் பம்ப் செய்யப்படுகிறது.
புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவோரின் வசதிக்காக, தவணை முறையில் கட்டணம் செலுத்த, குடிநீர் வாரியம் அனுமதி அளித்தது. அப்போதும் மக்கள் குடிநீர் இணைப்பு பெற முன்வரவில்லை. காவிரி குடிநீர் இணைப்புக்கு அதிகம் செலவிட வேண்டி வரும். எனவே ஆழ்துளைக் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர்.