தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழையால் சிக்கமகளூரு மக்கள் தத்தளிப்பு

 மழையால் சிக்கமகளூரு மக்கள் தத்தளிப்பு

 மழையால் சிக்கமகளூரு மக்கள் தத்தளிப்பு


ADDED : மே 01, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் பெய்த மழையால், மக்கள் தத்தளித்தனர். சாலைகள் ஆறுகளாக மாறின. வீட்டுக்குள் கழிவு நீர் புகுந்ததால், துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர்.

சிக்கமகளூரு மாவட்டத்தின், பெரும்பாலான பகுதிகளில் கடந்த 15 நாட்களாக, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் பரிதவித்த மக்களுக்கு, குளிர்ச்சியை அளித்துள்ளது என்றாலும், அசம்பாவிதங்களையும் ஏற்படுத்துகிறது. சிக்கமகளூரு நகரின் பல இடங்களில், நேற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

பல்வேறு சாலைகள் ஆறுகளை போன்று மாறின. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டதால், மழை நீருடன், கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து, துர்நாற்றம் வீசியது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் வீட்டுக்குள் வருவதால், மக்கள் பயத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நகரின் மல்லந்துார் சாலையில், மழை நீர் நின்றதால் வாகன பயணியர், பாதசாரிகள் அவதிப்பட்டனர். சிக்கமகளூரின், விஜயபுராவிலும் இதேபோன்ற சூழ்நிலை நிலவுகிறது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் தடைப்பட்டது.

மாவட்ட மருத்துவமனை அருகில், ஆபீசர்ஸ் கிளப் வளாகத்தில் உள்ள உணவகத்தில் மழை நீர் புகுந்தது. மூன்று அடிக்கும் அதிகமான நீர் நின்றுள்ளது. உணவகத்தில் உள்ள பொருட்கள் நீரில் மூழ்கி பாழாகின. மழைக்கு காபி தோட்டங்கள் பாழானதால், விவசாயிகள் நஷ்டமடை ந்துள்ளனர்.

ராம்நகர் மற்றும் ஷிவமொக்கா உட்பட, சில மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us