UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM

ஹொரமாவு: குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், சாலையில் விழும் பள்ளங்களில் வாகனங்கள் சிக்குவதால், மக்கள் பரிதவிக்கின்றனர்.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் ஹொரமாவு கனககிரி லே - அவுட்டில், கடந்த மாதம் காவிரி குடிநீருக்காக குழாய் பதிக்கும் பணி நடந்தது.
பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய ஊழியர்கள், சரியாக மூடாமல் சென்று விட்டனர்.
இதனால் பணி நடந்த இடத்தில் தற்போது சாலைகளில், திடீர் பள்ளங்கள் விழுகின்றன.
வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதை விழும் பள்ளங்களால், வாகனங்களின் டயர்கள் பள்ளங்களுக்கு இறக்கி விடுகிறது.
வாகனங்களை மீண்டும் வெளியே எடுப்பது கஷ்டமாக உள்ளது.
காலையில் அவசர, அவசரமாக பணிக்கு செல்வோர், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கும், சாலையில் விழும் பள்ளங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்று, அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.
