தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/துப்பாக்கி சுடும் போட்டி: அசத்தும் கோலார் பெண்

துப்பாக்கி சுடும் போட்டி: அசத்தும் கோலார் பெண்

துப்பாக்கி சுடும் போட்டி: அசத்தும் கோலார் பெண்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: கோலார் மாவட்டம், சீனிவாசபுரா தாலுகாவை சேர்ந்த திவ்யா; பெங்களூரில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர். பள்ளியில் படிக்கும்போது, கூடைப்பந்து விளையாடினார்.

சட்டம் படித்து கொண்டிருந்த போது, தனது சகோதரர், என்.சி.சி., மாணவராக இருந்து, ரைபிள் துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களை வென்றிருந்தார். இதன் மூலம், திவ்யாவுக்கும் துப்பாக்கி சுடும் விளையாட்டு அறிமுகமானது.

தன் வெற்றி பயணம் குறித்து, அவர் கூறியதாவது:

எனக்கு துப்பாக்கி சுடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதை தொழிலாக மாற்ற முடிவு செய்யவில்லை. சட்டம் படிக்கும்போது, வார இறுதி நாட்களில் மட்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கு செல்வேன்.

பட்டப்படிப்பு முடித்ததும், யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், கொரோனா பரவியதால், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த 2021ல் மீண்டும் தேசிய அளவிலான போட்டிகள் துவங்கிய போது, அதில் பங்கேற்க முடிவு செய்தேன். இரண்டு போட்டிகளிலும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று, பொதுமக்கள் பிரிவில் பதக்கங்களை வென்றது உத்வேகம் அளித்தது. இது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. பின், துப்பாக்கி சுடுதலில் தீவிர பயிற்சி எடுத்து கொள்ள துவங்கினேன்.

கடந்த 2022-ல், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றேன். 2023ல் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்காக இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றது மகிழ்ச்சி அளித்தது.

கடந்த 2024ல் முழங்கால் மூட்டின் நடுவில் உள்ள ஜவ்வை சரி செய்யப்படும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

இதனால் பாரிசில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது. இது, எனக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், விளையாட்டில் இருந்து விலகுவதை பற்றி சிந்திக்கவில்லை.

சர்வதேச அளவில் என் வெற்றியை அங்கீகரித்த, கர்நாடக அரசு, 2025-ல் கலால் துறை துணை கண்காணிப்பாளராக நியமித்தது. எனது விளையாட்டு சாதனைகளுடன், பணி பாதுகாப்பும் எனக்கு உதவியுள்ளது.

நான் எனது சட்டப் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால், வேறு துறைக்கு திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். இருப்பினும், எனது முழு முயற்சியையும் விளையாட்டுக்கே அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

எனவே, நடப்பாண்டு ஐ.எஸ்.எஸ்.எப்., உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றேன். அடுத்து 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தருவதே எனது இலக்காக வைத்துள்ளேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. எனது தகுதிச்சுற்று மதிப்பெண்களை மேம்படுத்தவும், எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.

தொடர் முயற்சியே வெற்றிக்கு வழி. நீங்கள் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். துப்பாக்கி சுடுதலில், நீங்களும், உங்கள் இலக்கும் மட்டுமே.

இலக்கை தவறவிடாமல், 10 புள்ளிகள் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என்பது என் விளையாட்டு வாழ்க்கையின் தாரக மந்திரமாக கருதுகிறேன்.

என் நாட்டிற்காக விளையாடும்போது எனக்கு கிடைக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் விளையாட்டு வாழ்க்கையின் கடைசி நாளில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று யாராவது கேட்டால், அன்று தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us