UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM

அ நிறம் | அளவு
ஆனேக்கல்: யானை தந்தங்களை கடத்தி வந்த, தமிழகத்தின் மூவரை ஆனேக்கல் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஏழு தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனேக்கல் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான முத்தியால் மடுவு அருகில், போலீசார் வாகன சோதனையில் நேற்று காலையில் ஈடுபட்டனர். அப்போது மாருதி ஆம்னி வேனை நிறுத்தி, சோதனை நடத்திய போது யானை தந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏழு தந்தங்கள், கார், மொபைல் போன், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றை கடத்தி வந்த தமிழகத்தின் சதீஷ்வரன், சரத்குமார், சங்கர் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் யானை தந்தங்களை விற்பதற்காக, தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
