/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச மருத்துவ முகாமில் மக்கள் திரளாக பங்கேற்பு
/
இலவச மருத்துவ முகாமில் மக்கள் திரளாக பங்கேற்பு
ADDED : ஏப் 13, 2025 07:16 AM

பெங்களூரு : சமூக ஆர்வலர் எஸ்.கோமதன் ஏற்பாட்டில் ஸ்ரீராமபுரம், பிரகாஷ்நகரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்தநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கே.குரூப் நிறுவன தலைவர் எஸ்.கோமதன் ஏற்பாட்டில், பிரகாஷ்நகர் சந்திரா ஆங்கில உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீராமபுரம் சேவாஸ்ரமம் ஆங்கில துவக்க, உயர்நிலைப் பள்ளி, பிரகாஷ்நகரில் அய்யப்பன் கோவில் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீராமபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில், நேற்று இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் ஸ்ரீராமபுரம், பிரகாஷ்நகர், ராமசந்திரபுரம், தயானந்தாநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மார்பக புற்றுநோய், புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர். கண் பரிசோதனையும் செய்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்த, எஸ்.கோமதன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேற்கண்ட நான்கு இடங்களில் இன்றும் இலவச மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
ஸ்ரீராமபுரம் சேவாஸ்ரமம் பள்ளியின் எதிரே உள்ள, அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி., முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், புகைப்படம், ஆதார் அட்டையுடன் கலந்து கொள்ளலாம். 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

