தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஹீமோபீலியா' நோயால் பாதிக்கப்பட்டோர் தன்னம்பிக்கையை இழக்க கூடாது: சிவகுமார்

 'ஹீமோபீலியா' நோயால் பாதிக்கப்பட்டோர் தன்னம்பிக்கையை இழக்க கூடாது: சிவகுமார்

 'ஹீமோபீலியா' நோயால் பாதிக்கப்பட்டோர் தன்னம்பிக்கையை இழக்க கூடாது: சிவகுமார்


ADDED : பிப் 26, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையை இழக்க கூடாது,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.

கர்நாடக அரசின் சுகாதார துறை சார்பில், ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, 'குஸ்ம சஞ்சீவினி' என்ற பெயரில் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. திட்டத்தை துவக்கி, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஊசி போடுவதற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஹீமோபீலியா உள்ளிட்ட அரிய வகை நோயால் பாதிக்கப்படுவோர் தன்னம்பிக்கையை இழக்க கூடாது. அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் வலிமையை அளிக்கவும் அரசு முடிவு செய்து உள்ளது.

ஹீமோபீலியா வந்தவுடன் எதிர்காலமே போய் விட்டது என்று நம்பிக்கையை இழக்க கூடாது. எந்த நோயாக இருந்தாலும் அதற்கு சிகிச்சை உண்டு. சில குழந்தைகள் கூட ஹீமோபிலியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை இயற்கையின் விதி என்று தான் கூற முடியும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே திட்டத்தை துவக்கி உள்ளோம்.

கர்நாடக சுகாதார துறை நாடு முழுதும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் சாதனைக்காக கைதட்ட வேண்டாம். காங்., மீண்டும் ஆட்சிக்கு வர ஆசிர்வாதம் வழங்குங்கள். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மருத்துவ கல்வி அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் உறுதியாக உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் 13,940 பேர் டாக்டராக பயிற்சி பெறுகின்றனர்.

மாநிலத்தில் 70 மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, நர்சிங் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கும் துணை குழுவின் தலைவராக நான் இருந்தேன். அப்போது நாங்கள் எடுத்த பல முடிவுகள் இன்று மக்களுக்கு பலன் அளிக்கிறது.

இவ்வாறு பேசினார்.

அமைச்சர் தினேஷ் குண்டுரா வ் பேசுகையில், ''கர்நாடகாவில் 2,621 ஹீமோபீலியா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு ஊசி, சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்தொகையை 50 கோடி ரூபாயாக உயர்த்த தயாரா க உள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us