தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., - எம்.எல்.ஏ., குறித்த சி.ஐ.டி., அறிக்கை ரத்து செய்தது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்

 பா.ஜ., - எம்.எல்.ஏ., குறித்த சி.ஐ.டி., அறிக்கை ரத்து செய்தது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்

 பா.ஜ., - எம்.எல்.ஏ., குறித்த சி.ஐ.டி., அறிக்கை ரத்து செய்தது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்


ADDED : மார் 03, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ஹனி டிராப் வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றமற்றவர்' என, அளிக்கப்பட்ட சி.ஐ.டி., அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ரத்து செய்தது.

பெங்களூரு லக்கரே ம.ஜ.த., பிரமுகர் நாராயணசாமி; இவர் நந்தினி லே - அவுட் போலீசில் அளித்த புகாரில், 'பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, என்னை, 'ஹனி டிராப்' மூலம் சிக்க வைக்க முயற்சிக்கிறார்.

அதேபோன்று, என் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான மஞ்சுளாவை கொல்ல கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார்' என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முனிரத்னா மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், 'முனிதரத்னா குற்றமற்றவர்' என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையை எதிர்த்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், நாராயணசாமி மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதி சிவகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் ஹனுமந்தராயா வாதிட்டதாவது:

எம்.எல்.ஏ., முனிரத்னா, லக்கரே நாராயணசாமி மற்றும் அவரின் மனைவியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து தன்னிடம் வழங்கினால், 50 லட்சம் ரூபாய் தருவதாக, 'பவர் டிவி' இயக்குநரிடமும், நிருபரிடமும் கூறியுள்ளார். இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், விசாரணை நடத்திய சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் முனிரத்னா குற்றமற்றவர் என்று அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

அதில், 'புகார் தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்கள், நம்பகமானவை அல்ல' என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது, அவர்களின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட கருத்து. எனவே, அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சி.ஐ.டி.,யினர் சமர்ப்பித்த குற்றமற்றவர் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us