/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு
/
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு
ADDED : டிச 24, 2025 07:26 AM
பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தி ல், பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி, விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதிக்குமாறு, கர்நாடகா மாநில கிரிக்கெட் அசோசியேஷன், மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. மைதானத்தின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆராய்வதற்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தலைமையில், சிறப்பு பணிக்குழுவை மாநில அரசு நேற்று முன்தினம் நியமித்தது.
இதுகுறித்து, சீமந்த் குமார் சிங் நேற்று கூறுகையில், “மைதானத்தின் பாதுகாப்பு வசதிகளில் குறைபாடு இருக்கிறது. இதனால், போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது,” என்றார்.
அதனால், இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த டில்லி -ஆந்திரா அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே போட்டி தேவனஹள்ளியில் உள்ள சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் மைதானத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
டில்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளதால், அவரை பார்ப்பதற்கு நிச்சயம் பெரிய அளவிலான கூட்டம் கூடும். அதனால், மீண்டும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதாலே, சின்னசாமி மைதானத்தில் போட்டி நடத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

