/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 29ல் துவக்கம்
/
சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 29ல் துவக்கம்
ADDED : டிச 24, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
பதினேழாவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஜனவரி, 29ம் தேதி துவங்கி பிப்ரவரி, 9ம் தேதி வரை நடக்கிறது. விழாவில், 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும்.
'பெ ண்கள் அதிகாரமளித்தல்' எனும் கருப்பொருளில் விழா நடக்கும். துவக்க விழா விதான் சவுதாவில் நடக்கும். அதை நானே துவக்கி வைப்பேன்.
விழாவின் துாதராக நடிகர் பிரகாஷ் ராஜ் நியமிக்கப்படுகிறார். திரைப்பட விழாவின் செலவுக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருது அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

