/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விளம்பர போர்டுகளுக்கு அனுமதி? ரூ.600 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
/
விளம்பர போர்டுகளுக்கு அனுமதி? ரூ.600 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
விளம்பர போர்டுகளுக்கு அனுமதி? ரூ.600 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
விளம்பர போர்டுகளுக்கு அனுமதி? ரூ.600 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2025 05:21 AM
பெங்களூரு: பெங்களூரின் அனைத்து இடங்களிலும் வர்த்தக விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. திட்டம் செயல்பட துவங்கினால், ஆண்டு தோறும் 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் வெளி வளாகங்களில் வர்த்தக விளம்பர போர்டுகள் பொருத்த அனுமதி அளிக்கும் நோக்கில், அரசு வகுத்துள்ள 'பெங்களூரு மாநகராட்சி விதிமுறைகள் - 2024'க்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே வர்த்தக விளம்பர போர்டுகளுக்கு அனுமதி அளிக்க சாலைகள் அடையாளம் காணப்பட்டன. இந்த சாலைகளில் விளம்பர போர்டுகள் வைக்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
கால அவகாசம் விளம்பர போர்டுகள் பொருத்துவதால், எட்டு மண்டலங்களில் மாநகராட்சிக்கு ஆண்டு தோறும் 515 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே டெண்டர் கோரி உள்ளோம். இதில் பங்கேற்க ஆகஸ்ட் 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நகரில் 18 மீட்டருக்கும் அதிக அகலமான சாலைகள், தொழிற் பகுதிகள், சந்திப்புகள், சதுக்கங்கள் உட்பட, பல இடங்களில் விளம்பர போர்டுகள் வைக்க அனுமதி அளிக்கப்படும். 18 முதல் 24 மீட்டர் அகல சாலைகளில் விளம்பர போர்டுகள் வைக்க மாதந்தோறும் சதுர அடிக்கு குறைந்தபட்சம் 75 ரூபாய்; 24 முதல் 30 மீட்டர் அகல சாலையில் 85 ரூபாய்; 30 முதல் 60 மீட்டர் அகல சாலையில் 90 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 24 மீட்டர் அகல சாலையில், 800 சதுர அடி விளம்பர போர்டுகள்; 24 முதல் 30 மீட்டர் சாலையில் 1,000 சதுர அடி; 30 முதல் 60 மீட்டர் சாலையில் 1,100 சதுர அடி; 60 மீட்டருக்கும் அதிக அகலமான சாலையில் 1,200 சதுர அடி; சதுக்கங்களில் 3,000 சதுர அடி; வர்த்தகம், தொழிற் பகுதிகளின் 12 மீட்டருக்கும் குறைவாக அகலம் உள்ள சாலையில் 600 சதுர அடி விளம்பர போர்டுகள் வைக்க அனுமதி இருக்கும்.
கட்டணம் உயர்வு டெண்டர் பெறும் நிறுவனங்கள், ஐந்து மாதங்களுக்கான விளம்பர கட்டணத்தை, முன் பணமாக செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, குறைவாக இருக்க கூடாது.
ஒப்பந்ததாரர்கள் 10 ஆண்டுகள் வரை, விளம்பர போர்டுகள் பொருத்தலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்படும்.
நகரின் நடைபாதைகள், விதான்சவுதா, உயர் நீதிமன்ற சுற்றுப்புற சாலைகள், கோவில்கள், குருத்வார், தேவாலயங்கள், மசூதிகளுக்கு செல்லும் சாலைகளில் விளம்பர போர்டுகள் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.