/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி? ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி? ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி? ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி? ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
ADDED : அக் 23, 2025 11:16 PM
கலபுரகி: சித்தாபூரில் நவ., 2ல் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இந்நிலையில், அதே நாளில் ஊர்வலம் நடத்த தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென ஏழு அமைப்புகள், தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளன.
நுாற்றாண்டு விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்து, சித்தாபூர் தாசில்தாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
அதேநாளில் தங்களின் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, 'பீம் ஆர்மி' அமைப்பினரும் விண்ணப்பித்தனர். இவ்விரு அமைப்புகளுக்கும் தாசில்தார் அனுமதி மறுத்தார்.
இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற கலபுரகி கிளையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தாசில்தாரின் முடிவு சரியே என்று நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மேல்முறையீடு செய்து, நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது.
இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இதற்கிடையில், நவ., 2ம் தேதி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 'பீம் ஆர்மி' அமைப்பினரும்; எஸ்.டி., இடஒதுக்கீடு போராட்டம் நடத்த குருபர் சமுதாயத்தினரும்; வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்கக் கோரி விவசாய சங்கத்தினரும்; அமைதி, ஒழுங்கு குறித்து பிரார்த்தனை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த கிறிஸ்துவ சமுதாயத்தினரும் என, இதுவரை மொத்தம் ஏழு அமைப்பினர் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., மனு மீது இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளதால், அனைத்து அமைப்பினர் மட்டுமின்றி, மாநில மக்களும் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.

