தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி

 அரசு இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி

 அரசு இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி


ADDED : மார் 29, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வருவாய்

 மாநகராட்சியின் வருவாய் துறை மூலம் 2026 - 2027ம் நிதி ஆண்டில் 1,964 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரியாக மட்டும், 872 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தகுதியான சொத்துக்களை, 'பி' பட்டாவில் இருந்து, 'ஏ' பட்டாவுக்கு மாற்றும் பணிகள் முதல், 563 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு.

 பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில், அரசின் சமுதாய கூடங்கள், விளையாட்டு அரங்கங்களை வாடகைக்கு விட அனுமதி அளிக்கப்படும். அரசு இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த முன்பதிவு செய்வது, பிற ஒப்புதல் செயல்முறைகளுக்காக அதிகாரிகளை நேரில் அணுகுவதற்கு பதிலாக, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில், புதிய தொழில்நுட்ப செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

 மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், ஏரிகள், துணி துவைக்கும் இடம் உட்பட 1,946 சொத்துக்கள் உள்ளன. இங்கிருந்து வாடகையாக 29.50 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு.

 மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படும். இதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us