/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செல்லப்பிராணிகள் கண்காட்சி அசத்திய நாய்கள்
/
செல்லப்பிராணிகள் கண்காட்சி அசத்திய நாய்கள்
ADDED : செப் 29, 2025 06:07 AM

மைசூரு தசராவை ஒட்டி, பல விதமான நாய்களின் அணிவகுப்பு, குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. தசராவை ஒட்டி, கால்நடை துறை சார்பில் மைசூரு ரயில் நிலையம் அருகில் உள்ள ஜே.கே., மைதானத்தில் நேற்று செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்டோர் தங்கள் செல்லப் பிராணிகளான நாய், பூனை, கோழி, வாத்துகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கான ரேம்ப் வாக், கட்டளைக்கு கீழ்படிதல், ஆடை அலங்கார போட்டி, எதிரிகளிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றுவது என பல விதமான போட்டிகளில் அசத்தின.
முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக 5,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 2,500 ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன.