/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரபா எம்.பி., வெற்றி எதிர்த்த மனு தள்ளுபடி
/
பிரபா எம்.பி., வெற்றி எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 31, 2025 05:56 AM

பெங்களூரு :  லோக்சபா தேர்தலில் தாவணகெரே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். பிரபாவின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, தோல்வி அடைந்த பா.ஜ., வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
த னது மனுவில், ஐந்து வாக்குறுதி திட்ட அட்டைகளை வாக்காளர்களுக்கு வினியோகித்து, பெண்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பிரபா உறுதி அளித்து உள்ளார்.
பணம் தருவதாக வாக்காளர்களை கவர்ந்து வெற்றி பெற்று இருக்கிறார் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி அருண் விசாரித்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறினார். வாக்குறுதி திட்டங்கள் வாக்காளர்களை கவரும், அம்சமாக கருத முடியாது என்று கூறி, காயத்ரி தாக்கல் செய்த, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

