தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வார்டு பெயரை மாற்ற கோரிய மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம்

 வார்டு பெயரை மாற்ற கோரிய மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம்

 வார்டு பெயரை மாற்ற கோரிய மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம்


ADDED : பிப் 12, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வார்டு பெயரை மாற்றும்படி கோரிய மனுதாரருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.

ஜி.பி,ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், வார்டுகளை மறு சீராய்வு செய்த போது, வரலாற்று பிரசித்தி பெற்ற சுஞ்சகட்டா பகுதியை, 150 மக்கள் தொகை உள்ள பீரேஸ்வரநகரில் சேர்த்து, பீரேஸ்வரா நகர் என்ற பெயரை நீட்டித்தது.

இது குறித்து கேள்வி எழுப்பி, ராஜானுகுன்டேவின் ரேணுகா எல்லம்மா கோவில் டிரஸ்டி உட்பட, 20 பேர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்தனர். 'சுஞ்சகட்டா வரலாற்று பின்னணி கொண்டதாகும். சுஞ்சகட்டா என, வார்டுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என, கோரினர்.

இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனச்சா முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 'ஒரு வார்டுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதில், பொது நலன் எங்குள்ளது. இதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவது ஏன்' என கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், 'அனைத்து ஆவணங்களிலும் சுஞ்சகட்டா என்ற பெயரே உள்ளது' என, வாதிட்டும் நீதிபதிகள் ஏற்கவில்லை.

குறிப்பிட்ட வார்டுக்கு பெயர் சூட்டுவது, நிர்வாகத்தின் முடிவாகும்.

இது பற்றி கேள்வி எழுப்பி, பொது நலன் மனு தாக்கல் செய்வது அர்த்தமற்றது. இது பொது நலன் மனு அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us