பெட்ரோல் குண்டு 'ரீல்ஸ்' 'பிக்பாஸ்' ரஜத் மீது வழக்கு
பெட்ரோல் குண்டு 'ரீல்ஸ்' 'பிக்பாஸ்' ரஜத் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2026 11:54 PM

பெங்களூரு: பெட்ரோல் குண்டை சாலையில் வெடிக்க செய்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த, பிக்பாஸ் பிரபலம் ரஜத் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கன்னட பிக்பாஸ் 12வது சீசன் 2வது வெற்றியாளர் ரஜத் கிஷன். சினிமாவில் வாய்ப்பு தேடும் இவர், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுகிறார். சில தினங்களுக்கு முன், பெட்ரோல் குண்டை சாலையில் வெடிக்க செய்து, ஸ்டைலாக நடந்து செல்லும் ரீல்ஸ் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடியோவை அழித்துவிட்டு, தான் செய்தது தவறு என்று கூறி மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் அந்த வீடியோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததால், ககலிபுரா போலீசார் ரஜத் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பவும் தயாராகி வருகின்றனர்.
இதற்கு முன்பு அரிவாளை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்காக, ரஜத் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
