தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மரத்தில் மோதிய பெட்ரோல் லாரி சாம்பல்

 மரத்தில் மோதிய பெட்ரோல் லாரி சாம்பல்

 மரத்தில் மோதிய பெட்ரோல் லாரி சாம்பல்


ADDED : ஜூலை 10, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: பெங்களூரு அருகே, மரத்தில் மோதிய பெட்ரோல் டேங்கர் லாரியும், அதன் அருகில் சென்ற பால் டேங்கர் லாரியிலும் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தாலுகா தொட்டபெலவங்கலா கிராமம் 11 வது மைல் பகுதியில், நேற்று காலை பெட்ரோல் டேங்கர் லாரி வேகமாக சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் இருந்த, மரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்கம் தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக கீழே குதித்தார்.

லாரியில் பிடித்த தீ, பக்கத்தில் சென்ற பால் டேங்கர் லாரி மீதும் பிடித்து எரிந்தது. அந்த லாரியின் டிரைவரும் கீழே குதித்து உயிர் தப்பினார். இரு லாரியிலும் தீ மளமளவென பரவி வேகமாக எரிந்ததால், அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிரை காப்பாற்றி கொள்ள ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், இரு லாரிகளிலும் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் பால் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. பெட்ரோல் டேங்கர் லாரியின் முன்பக்கம் மட்டும் எரிந்தது. ஒருவேளை டேங்கரில் தீப்பிடித்து வெடித்து இருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். விபத்துக்கான காரணத்தை தொட்டபெலவங்கலா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us