வரும் 12 வரை குடகு ராஜா சீட் செல்ல சுற்றுலா பயணியருக்கு தற்காலிக தடை
வரும் 12 வரை குடகு ராஜா சீட் செல்ல சுற்றுலா பயணியருக்கு தற்காலிக தடை
ADDED : ஜூலை 10, 2026 12:27 AM

குடகு: மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், வரு ம், 12ம் தேதி வரை மடிகேரி ராஜா சீட் செல்ல, சுற்றுலா பயணியருக்கு தற்காலிக தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சோசசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில நா ட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. கடந்த 7ம் தேதி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் அருகில், சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை சேதம் அடைந்ததால், போக்குவரத்தை எளிதாக்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே , வரும் 12ம் தேதி வரை மடிகேரி ராஜா சீட்டிற்கு சுற்றுலா பயணியர் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை சரி செய்யும் வரை, ராஜா சீட் வழியாக சுற்றுலா பஸ் தவிர்த்து அரசு, தனியார், பிற வாகனங்கள் செல்லும்.
ராஜா சீட் சாலை குறுகலானது என்பதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுற்றுலா வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் தீவிரம் அடையும்.
அத்துடன், ராஜா சீட் சுற்றுப்பகுதியில் பள்ளிகள் உள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, பொது நலன், போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றை கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
