தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜிம் பயிற்சியாளர் விபத்தில் இறந்த வழக்கு கொலை என எஸ்.பி.,யிடம் தந்தை புகார்

 ஜிம் பயிற்சியாளர் விபத்தில் இறந்த வழக்கு கொலை என எஸ்.பி.,யிடம் தந்தை புகார்

 ஜிம் பயிற்சியாளர் விபத்தில் இறந்த வழக்கு கொலை என எஸ்.பி.,யிடம் தந்தை புகார்


ADDED : ஜூலை 10, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: ஜிம் பயிற்சியாளர் விபத்தில் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டதாக தந்தை, போலீஸ் எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு நாராயணபுராவில் வசித்தவர் தேவி பிரசாத், 30. ஜிம் பயிற்சியாளர். கடந்த மே 8ம் தேதி இரவு, சிக்கபல்லாபூரின் குடிபண்டேவுக்கு தேவி பிரசாத் பைக்கில் சென்றார். இன்னொரு பைக்கில் உறவினர் விக்கி, நண்பர் ஜோஸ்வா ஆகியோரும் சென்றனர்.

சிக்கபல்லாபூரின் செட்டின்னே என்ற இடத்தில் சென்ற போது, பைக்கில் இருந்து விழுந்த தேவி பிரசாத் இறந்தார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக விக்கியும், ஜோஸ்வாவும் போலீசாரிடம் கூறினர். இதனால் விபத்து என வழக்குப்பதிவானது.

இந்நிலையில், தேவி பிரசாத்தின் தந்தை பாபு நடராஜ், சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக்சியை நேற்று சந்தித்தார். அப்போது, 'என் மகன் தேவி பிரசாத் விபத்தில் இறக்கவில்லை; அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது' என்று கூறி புகார் மனு அளித்தார்.

பின், அவர் கூறியதாவது:

என் மகன் வேலை செய்த ஜிம்மிற்கு, மூன்று குழந்தைகளின் தாய் உடற்பயிற்சிக்காக வந்தார். அவருக்கும், எனது மகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து உள்ளனர்.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் பிரச்னை செய்ததால், அந்த பெண்ணை என் மகன் பிரிந்தார். இதனால் அந்த பெண்ணே, எனது உறவினர் விக்கி, ஜோஸ்வா மூலம் தேவி பிரசாத்தை கொன்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

அவர் அளித்த புகாரின்படி, சிக்கபல்லாபூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us