/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்
/
இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்
ADDED : நவ 16, 2025 10:58 PM
மங்களூரு: உணவு சாப்பிடுவதற்காக, பேயிங் கெஸ்ட் மையத்தில் இருந்து, வெளியே சென்ற மாணவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் மல்லிக் அபூபக்கர், 20. இவர் தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாலின், தேரளகட்டேவில் உள்ள கல்லுாரியில், பி.என்.ஒய்.எஸ்., படித்து வருகிறார்.
தேரளகட்டே அருகில் உள்ள அப்துல் ஷரீப் என்பவருக்கு சொந்தமான, பேயிங் கெஸ்ட் மையத்தில் தங்கியிருந்தார் . நேற்று முன்தினம் இரவு, சாப்பிட செல்வதாக கூறி, பி.ஜி.,யில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. சக மாணவர்கள் அப்துல் ஷரீப்பிடம் கூறினர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவர் காணாமல் போனது குறித்து, அவரது தாய்க்கு த கவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த தாய், பி.ஜி.,க்கு வந்தார். உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

