UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 10:14 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: கோலார் மாவட்டத்தில் பா.ஜ.,வின் விஜய சங்கல்ப யாத்திரை, முல்பாகல் குருடுமலை கணபதி கோவில் பூஜைக்கு பின் துவங்கியது.
கோலார் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபைத் தொகுதிகளில், 2023 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியிலும், பா.ஜ., வெற்றிப் பெறவில்லை. எனவே, 2028 சட்டசபை தேர்தலில், கோலார் மாவட்டத்தில் பா.ஜ., பலத்தை உயர்த்த, விஜய சங்கல்ப பாதயாத்திரையை நேற்று கோலார் மாவட்டத்தில் துவக்கினர்.
இதை முன்னிட்டு, முல்பாகல் குருடு மலை கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மாவட்ட தலைவர் ஓம்சக்தி சலபதி உட்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.
