தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தர்ஷனை சந்திக்க முடியாமல் திரும்பிய நடிகை ரசிதா ராம்

தர்ஷனை சந்திக்க முடியாமல் திரும்பிய நடிகை ரசிதா ராம்

தர்ஷனை சந்திக்க முடியாமல் திரும்பிய நடிகை ரசிதா ராம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷனை, சந்திக்க இரண்டு மணி நேரம் காத்திருந்தும், அவரை சந்திக்க முடிாமல் நடிகை ரசிதா ராம் திரும்பினார்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ளார். அவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதோஷ் ராவின் வாக்குமூலத்தை நிறுத்த கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், தர்ஷனை சந்திக்க, நடிகை ரசிதா ராம் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு சென்றார். இவர் வந்திருக்கும் தகவல், தர்ஷனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தர்ஷன் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு மணி நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியாததால், ரசிதாராம் வீடு திரும்பினார்.

சிறையில் தன் நண்பர்கள், திரையுலகத்தினரை சந்திக்க மறுக்கும் தர்ஷன், தன் தாய், மனைவி, மகன், சகோதரனை மட்டும் சந்தித்து பேசுகிறார்.

அத்துடன், அப்ரூவராக மாறி பிரதோஷ் ராவ் வாக்குமூலம் அளித்து உள்ளதால், தர்ஷன் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இதனால் தற்போதைக்கு யாரையும் சந்திக்க விருப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us