/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமான பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த விமானி
/
விமான பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த விமானி
ADDED : நவ 25, 2025 06:06 AM
ஹலசூரு: தனியார் ஹோட்டலில் விமான பணிப்பெண்ணை, அவருடன் வேலை செய்யும் விமானியே பலாத்காரம் செய்த சம்பவம், தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹலசூரு போலீசார் கூறியதாவது:
விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் 26 வயது பெண், அவர் வேலை செய்யும் விமானத்தின் விமானியுடன் பணி நிமித்தமாக கடந்த 18ம் தேதி, பெங்களூரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார்.
அப்போது, விமானி ரோஹித் சரண், அப்பெண்ணை சிகரெட் பிடிக்கலாம் என அழைத்தார். அச்சமயத்தில், அவர் பணிப்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.
இதன்பின், இருவரும் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றனர். அங்கு சென்றவுடன், அப்பெண் நடந்த சம்பவம் குறித்து ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பூஜ்ஜிய எப்.ஐ.ஆர்., முறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெங்களூரில் குற்றம் நடந்ததால், ஹலசூரு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

