/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்கள் பாதுகாப்புக்காக 'பிங் பைக் டாக்சி' திட்டம்
/
பெண்கள் பாதுகாப்புக்காக 'பிங் பைக் டாக்சி' திட்டம்
பெண்கள் பாதுகாப்புக்காக 'பிங் பைக் டாக்சி' திட்டம்
பெண்கள் பாதுகாப்புக்காக 'பிங் பைக் டாக்சி' திட்டம்
ADDED : பிப் 18, 2025 05:50 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ரேபிடோ நிறுவனம், 'பிங் பைக் டாக்சி' திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
பெங்களூரில் பைக் டாக்சி, ஆட்டோ, காரில் செல்லும் பெண்கள் பலர், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் பெண்கள் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களில் செல்லும்போது சில ஆண் டிரைவர்கள், அவர்களிடம் அத்துமீறுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பைக் டாக்சி நிறுவனமான 'ரேபிடோ' ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.
இத்திட்டத்திற்கு 'பிங் பைக் டாக்சி' எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் முன்பதிவு செய்யும் பைக் டாக்சிகளில் ஆண்களுக்கு பதிலாக, பெண்களே டிரைவர்களாக வருவர்.
இதனால், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும். இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 25,000 பெண்களுக்கு வேலை வழங்கப்படும். 'கர்நாடகா ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய முயற்சித்து வரும் வேளையில், பிங் பைக் டாக்சி போன்ற திட்டங்கள் உறுதுணையாக இருக்கும்' என, பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.