/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலை ரவுடிகள் இல்லா நகரமாக்க திட்டம்
/
தங்கவயலை ரவுடிகள் இல்லா நகரமாக்க திட்டம்
ADDED : டிச 22, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ரவு டிகள் இல்லாத தங்கவயலாக மாற்றுவதற்காக, ரவுடிகள் நடமாட்டம் இருந்த பகுதிகளில் போலீஸ் எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை, சஞ்சய்காந்தி நகர், அம்பேத்கர் நகர், உரிகம் ஈ.டி., பிளாக் ஆகிய இடங்களில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். தெருவெங்கும் சுற்றி வந்த போலீசார், அப்பகுதிகளின் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று எச்சரிக்கையும், அறிவுரையும் வழங்கினர்.
தங்கவயலை ரவுடிகள் இல்லாத நகரமாக மாற்ற, பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, போலீசார் தங்களின் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

