ADDED : ஆக 01, 2026 06:32 AM

- நமது நிருபர் -
காலை சிற்றுண்டிக்கு தினமும் இட்லி, தோசை அல்லது உப்புமாவா என, சிறுவர்கள் புலம்புகிறார்களா... 20 நிமிடத்தில் செய்யலாம் 'மசாலா பிரெஞ்ச் டோஸ்ட்' செய்து கொடுங்கள். காலை அவசர நேரத்தில், அம்மாக்களுக்கு கை கொடுக்கும் இது, குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ்கள் - 4
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி - 1 கைப்பிடி
சீஸ் - 1 ஸ்லைஸ்
மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
தனியா துாள் - 1 ஸ்பூன்
மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
மிளகு துாள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகாய் துாள், மிளகு துாள், தனியா துாள், உப்பு, மூன்று ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, அனைத்து மசாலாக்களும் நன்றாக சேரும் வகையில் கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றவும். சூடானதும் ஒவ்வொரு பிரட் ஸ்லைஸ்களையும், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள முட்டை கலவையில் இரண்டு பக்கமும் தோய்த்து எடுத்து, வாணலியில் போடவும். அதன் மீது சீஸ் துருவலை துாவி, சிறிதளவு முட்டை கலவையை ஊற்றவும். மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கங்களை பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், சுவையான மசாலா பிரெஞ்ச் டோஸ்ட் தயார். தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள, பொருத்தமாக இருக்கும். காலை, மாலை டிபனுக்கு ஏற்றது!
