தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


ADDED : நவ 14, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் காலேன அக்ரஹாரா - சுத்தகுண்டேபாளையா இடையே, புதிய மெட்ரோ ரயில் சேவையை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சிவகுமாருடன் கைகோர்த்து, பச்சைக்கொடி காட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரின் காலேன அக்ரஹாரா - நாகவாரா இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், காலேன அக்ரஹாரா - சுத்தகுண்டேபாளையா வரையிலான, 7.50 கி.மீ., தொலைவுக்கான பணிகள் முடிந்துள்ளது. இதை, பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்காக, சுத்தகுண்டேபாளையா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், 'பணம் செலுத்தி, சுத்தகுண்டேபாளையாவில் இருந்து பிலேகஹள்ளி ஐ.ஐ.எம்.பி., வரை செல்ல டிக்கெட் எடுத்தார்.

பின், விழா மேடைக்கு வந்த பிரதமர், மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க தயாரானார். அப்போது தன் அருகில் நின்ற முதல்வர் சிவகுமார் கையை பிடித்து இழுத்து, இருவரும் சேர்ந்து ஒன்றாக, பச்சை கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கினர்.

பின், பிரதமர், முதல்வர், கவர்னர் சுதா யாதவ், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆகியோர் மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் செய்தனர்.

பிலேகஹள்ளி ஐ.ஐ.எம்.பி., ரயில் நிலையத்தில் இறங்கிய பிரதமர் உள்ளிட்டோர், ஐ.ஐ.எம்.பி., வளாகத்தில் நடந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us