/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பி.எம்., ஸ்ரீ' திட்டம் 665 பள்ளிகள் தேர்வு
/
'பி.எம்., ஸ்ரீ' திட்டம் 665 பள்ளிகள் தேர்வு
ADDED : ஆக 06, 2025 12:25 AM
பெங்களூரு : கர்நாடகாவில் 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தின் கீழ் 665 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
தேசிய கல்வி கொள்கை 2020ன் கீழ், நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக 'பி.எம்., ஸ்ரீ' திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசு 10 முதல் 15 லட்சம் வரை நிதி வழங்கும்.
இதன் மூலம், பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் கற்பிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் செயல்முறை 2023 - 24; 2024 - 25 கல்வியாண்டுகளில் ஆறு கட்டங்களாக நடந்தது.
இதில், தகுதி வாய்ந்த பள்ளிகள் குறித்து மாநில பள்ளி கல்வித்துறை மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பியது. இதில் உள்ள தகுதியான பள்ளிகளை மத்திய அரசு தேர்வு செய்தது.
இவ்வரிசையில், பி.எம்., ஸ்ரீ திட்டத்துக்கு மாநிலம் முழுதும் 665 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கடலோர பகுதியான தட்சிண கன்னடாவில் 23 பள்ளிகளும்; உடுப்பியில் 14 பள்ளிகளும் அடங்கும்.