/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்சோ' சட்டம் சிறுவர்களுக்கும் பொருந்தும்! 52 வயது பெண் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
/
'போக்சோ' சட்டம் சிறுவர்களுக்கும் பொருந்தும்! 52 வயது பெண் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
'போக்சோ' சட்டம் சிறுவர்களுக்கும் பொருந்தும்! 52 வயது பெண் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
'போக்சோ' சட்டம் சிறுவர்களுக்கும் பொருந்தும்! 52 வயது பெண் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ADDED : ஆக 19, 2025 02:40 AM

பெங்களூரு : தன் இச்சைக்கு, 16 வயது சிறுவனை பயன்படுத்திய 52 வயது பெண் மீதான, 'போக்சோ' வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்.,லில், 52 வயது பெண் வசிக்கிறார். ஓவிய ஆசிரியையாக பணியாற்றும் இவர், தன் வீட்டிலேயே ஓவியக்கலை கற்றுத் தருகிறார். 2022ல் இவரது வீட்டுக்கு 16 வயது சிறுவன் ஓவியக்கலை கற்க வந்தார். இந்த சிறுவனை அப்பெண், தன் தகாத இச்சைக்கு பயன்படுத்தினார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுவனுடன் உல்லாசமாக இருந்தார். இதற்கிடையே சிறுவனின் குடும்பத்தினர், துபாய்க்கு குடிபெயர்ந்தனர். அங்கு சென்றதில் இருந்து, சிறுவன் மந்தமாக இருந்தார். படிப்பிலும் ஆர்வம் காட்டவில்லை. மகனின் மாற்றத்தை பார்த்த பெற்றோர், மனநல டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
சிறுவனிடம் டாக்டர் பேசியபோது, ஆசிரியையின் செயலை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பெங்களூருக்கு வந்து ஆசிரியை மீது, ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் அந்த ஆசிரியை மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீது பதிவான வழக்கை, ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆசிரியை மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
பெண்ணின் தரப்பில் ஆஜரான வக்கீல், 'பெண் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு தொடர் முடியாது. ஏன் என்றால் சிறுவனை பெண் பலாத்காரம் செய்யவில்லை' என, வாதிட்டார்.
இவரது வாதத்தை ஏற்காத நீதிபதி நாக பிரசன்னா, '18 வயதுக்கு உட்பட்ட, அனைத்து சிறார்களுக்கும், 'போக்சோ' சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. பெண் குழந்தைகளை போன்று, ஆண் குழந்தைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். தற்போதைய அறிக்கையின்படி, சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை 54.4 சதவீதமும்; சிறுமியர் மீதான பாலியல் வன்முறை 45.5 சதவீதமும் உள்ளது. 'போக்சோ' சட்டத்துக்கு, பாலின பாகுபாடு இல்லை' என, கருத்து தெரிவித்து, பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தார்.