/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒன்பதாம் வகுப்பு மாணவி 'பகீர்' தாய் மீது 'போக்சோ' வழக்கு?
/
ஒன்பதாம் வகுப்பு மாணவி 'பகீர்' தாய் மீது 'போக்சோ' வழக்கு?
ஒன்பதாம் வகுப்பு மாணவி 'பகீர்' தாய் மீது 'போக்சோ' வழக்கு?
ஒன்பதாம் வகுப்பு மாணவி 'பகீர்' தாய் மீது 'போக்சோ' வழக்கு?
ADDED : ஜூன் 29, 2025 06:55 AM
ஆர்.டி.நகர்: 'திருமணத்துக்கு பின், கணவருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று தாய் விளக்கியதாக ஒன்பதாம் வகுப்பு மாணவி கூறியதை அடுத்து, தாய் மீது, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
ஆர்.டி., நகரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு, குழந்தைகள் நல கமிட்டியின் பெண் உறுப்பினர் சென்றிருந்தார். அங்கு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அப்போது, 'திருமணமான பின், கணருவடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, என் அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாய் பேசினார்' என, ஒரு மாணவி கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த உறுப்பினர், உடனடியாக ஆர்.டி., நகர் போலீசில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், சிறுமி, தன் தாய், தங்கையுடன் வசித்து வருவதாகவும், குடும்ப பிரச்னையால் அவரது தந்தை தனியாக வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சிறுமியின் தாய், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சிறுமியிடம் கமிட்டியின் வேறு இரு உறுப்பினர்கள் மீண்டும் விசாரித்தனர். அப்போது ஒருவரிடம் தாய் குறித்து மாணவி பேசினார்; 'மற்றொருவரிடம் தாய் தவறு எதுவும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.
குழப்பம் அடைந்த போலீசார், அச்சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இறுதியில் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாய் மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்வதா அல்லது தாக்குதல் வழக்குப் பதிவு செய்வதா என்பது குறித்து முடிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.