/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலி மகள் பலாத்காரம் ஜோதிடர் மீது 'போக்சோ' வழக்கு
/
கள்ளக்காதலி மகள் பலாத்காரம் ஜோதிடர் மீது 'போக்சோ' வழக்கு
கள்ளக்காதலி மகள் பலாத்காரம் ஜோதிடர் மீது 'போக்சோ' வழக்கு
கள்ளக்காதலி மகள் பலாத்காரம் ஜோதிடர் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : பிப் 23, 2026 04:48 AM

கார்வார்: கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜோதிடர் கமலாகர் பட் மீது, கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ததாக, 'போக்சோ' வழக்குப் பதிவாகி உள்ளது.
ஷிவமொக்கா டவுன் துங்காநகரை சேர்ந்தவர் கமலாகர் பட், 47; பிரபல ஜோதிடர். இவருக்கும், உத்தர கன்னடாவின் சித்தாபூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தின் மகேஷ் நாயக் மனைவி சுசித்ரா, 39, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது.
கணவரை பிரிந்த சுசித்ரா, தனது 14, 13 வயது மகள்களுடன், கமலாகர் பட்டுடன் வசித்தார். தாயை பிரிந்த 14 வயது மகள் தந்தையிடம் சென்றார். மகளை அழைத்து வர சென்றபோது ஏற்பட்ட தகராறில் மகேஷ் நாயக் சகோதரர் வசந்த் நாயக், 41, கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கமலாகர் பட், சுசித்ரா உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமின் கேட்டு கமலாகர் பட் மனு செய்தார். இம்மனு மீது கார்வார் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுசித்ராவின் முதல் மகளான 14 வயது சிறுமி, சித்தாபூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், 'ஷிவமொக்காவில் கமலாகர் பட்டுடன் தங்கி இருந்த போது, தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் கமலாகர் பட் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இந்த புகாரின்படி கமலாகர் பட் மீது சித்தாபூர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடம் ஷிவமொக்கா என்பதால் அங்கு வழக்கு மாற்றப்பட்டு உள்ளது.

