/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பார்வையாளர்களை அசத்திய போலீஸ் பேண்ட் குழுவினர்
/
பார்வையாளர்களை அசத்திய போலீஸ் பேண்ட் குழுவினர்
ADDED : செப் 27, 2025 11:12 PM

மைசூரு பிரமாண்டமான அரண்மனை முன், 30 மாவட்டங்களை சேர்ந்த 379 போலீசார், தங்களுக்கென தனித்துவமான பாணியில் இசையமைத்தனர்.
இவர்களின் இசையை கேட்ட பார்வையாளர்கள், தங்களையும் மறந்து தலையை ஆட்டியபடி ரசித்து கேட்டனர்.
கோபிநாத் தலைமையில் 'பாரத் கே ஜவான்', 'விஜயபாரதி', 'ஜலபக்ஷி' பாடல்களை இசைத்தனர்.
பிரவீன் குமார் தலைமையில் 'ஸ்டிக் மேஜர் ஷோ குயின் கலர்ஸ்', ஆங்கில இசைக்குழுவின் 'கதம் கதம்', 'வந்தே மாதரம்' உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை இசைத்தனர்.
குமார் ரெட்டி, ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், 'இந்தியா கேட்', 'பைபர் ரைபிள்ஸ்', ஸ்கை போட்', 'சாரே ஜஹான்சே அச்சா' ஆகிய பாடல்களை நிகழ்த்தியது.
துர்காதேவி இசை குழுவினரின் கன்னட பாடல்களை இசை கருவிகள் மூலம் வாசித்தனர்.
டோனி மேத்யூ தலைமையிலான குழவினர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களின் பல பாடல்களை புல்லாங்குழல், கிதாரில் வாசித்தனர்.
அதேநேரத்தில், சந்துரு, சிவகுமார் தலைமையில் ஒரு குழுவினர் டிரம்ஸ் வாசித்தனர்.
பின், அனைவரும் அணிவகுப்பு நடத்தினர். இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.