/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வேறு துறைகளில் மூக்கை நுழைக்காதீர்': போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
/
'வேறு துறைகளில் மூக்கை நுழைக்காதீர்': போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
'வேறு துறைகளில் மூக்கை நுழைக்காதீர்': போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
'வேறு துறைகளில் மூக்கை நுழைக்காதீர்': போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2025 11:02 PM

பெங்களூரு: ''போலீஸ் வேலையை மட்டுமே போலீசார் பார்க்க வேண்டும். வேறு துறைகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் எச்சரித்தார்.
பெங்களூரு, ஆடுகோடியின் போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் மாதாந்திர போலீஸ் அணிவகுப்பு, நேற்று நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் பேசியதாவது:
தொந்தரவு
போலீசார், தங்கள் துறைகளின் பணியை மட்டும் கவனிக்க வேண்டும். வேறு துறைகளின் விஷயத்தில் தலையிட கூடாது.
தலையிட்டு சிக்கினால், உங்களின் பணிக்கு தொந்தரவு ஏற்படும். என்ன நோக்கத்துக்காக போலீஸ் துறையில் பணிக்கு வந்தீர்கள் என்பதை அறிந்து, நல்ல முறையில் பணியாற்றுங்கள்.
உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள். இடமாற்றம் பிரச்னையை எடுத்துக் கொண்டு, எங்களிடம் வராதீர்கள். பெங்களூரில் ஒரு போலீஸ் நிலையத்தில் இருந்து, மற்றோரு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றினால், அங்கு சென்று பணியாற்றுங்கள்.
அடையாளம்
வெகு துாரத்தில் உள்ள ஊர்களில் இருந்து வந்த போலீசார் பலரும், பெங்களூரில் பணியாற்றுகின்றனர். நகரிலேயே பணியாற்றும் நீங்கள், இடமாற்றத்தை ஏன் விரும்புகிறீர்கள்? நகர போலீசார் திறமை, நேர்மை, அர்ப்பணிப்பு, சமத்துவம், பாதுகாப்பு, தைரியம், நியாயம், நீதியின் அடையாளம்.
போலீஸ் துறையில் சேர்ந்த பின், பயிற்சி நேரத்தில் அளிக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றுங்கள். நல்ல சூழ்நிலையில் இருக்கிறீர்கள். பணி நெருக்கடியில், நீங்கள் எங்கு இருந்தாலும் அணிவகுப்பு விஷயத்தில், கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கட்டங்களிலும் அணிவகுப்பு நடப்பதால், ஒழுங்கு ஏற்படும்.
முதலில் போலீசாருக்கு ஒழுங்கு முக்கியம். இதே ஒழுங்கு, ஓய்வு பெறும் வரையிலும் இருக்க வேண்டும். மற்ற துறைகளை போன்று போலீஸ் துறை இல்லை.
போலீசாரின் பணி மிகவும் கஷ்டமானது. பணியுடன், உங்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். உங்களின் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
போலீஸ் துறைக்கு, அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது; இனியும் வழங்கும். ஆடுகோடி அணிவகுப்பு மைதானத்தை, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேறு துறையினர், இந்த இடத்தை பயன்படுத்துவர். ஏட்டு முதல் கமிஷனர் என, அனைவரும் ஒன்றுதான். சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.