/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தர்ஷன் ரசிகர்கள் மீது போலீசில் புகார்'
/
'தர்ஷன் ரசிகர்கள் மீது போலீசில் புகார்'
ADDED : ஜூலை 29, 2025 01:45 AM

பெங்களூரு: தர்ஷன் ரசிகர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையான ரம்யா, சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர்.
இவர், ரேணுகாசாமி கொலை வழக்கில், அவரது குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்தே கூறி வருகிறார்.
இதனால், தர்ஷன் ரசிகர்கள், ரம்யாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். ரம்யாவுக்கும், தர்ஷன் ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்தது.
ஆத்திரம் அடைந்த ரம்யா, தர்ஷன் ரசிகர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரம்யா தன் வக்கீலுடன் ஆலோசித்துவிட்டு, ஆபாச செய்திகள் அனுப்பும் தர்ஷன் ரசிகர்கள் மீது, சைபர் கிரைம் போலீசில்புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தர்ஷனின் அதிகாரப்பூர்வ ரசிகர்கள், 'எக்ஸ்', முகநுால் பக்கத்தில், 'தர்ஷன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யாருக்கும் பதில் அளிக்க வேண்டாம்.
'அமைதி காக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, சமூக நலப்பணிகளை செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.