/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசார் பணம் கேட்டிருந்தால் நடவடிக்கை பாயும்; பெண் தவறி விழுந்த சம்பவத்தில் டி.சி.பி., உறுதி
/
போலீசார் பணம் கேட்டிருந்தால் நடவடிக்கை பாயும்; பெண் தவறி விழுந்த சம்பவத்தில் டி.சி.பி., உறுதி
போலீசார் பணம் கேட்டிருந்தால் நடவடிக்கை பாயும்; பெண் தவறி விழுந்த சம்பவத்தில் டி.சி.பி., உறுதி
போலீசார் பணம் கேட்டிருந்தால் நடவடிக்கை பாயும்; பெண் தவறி விழுந்த சம்பவத்தில் டி.சி.பி., உறுதி
ADDED : டிச 16, 2025 11:22 PM

பெங்களூரு: ''போலீசார் விசாரிக்க சென்ற போது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஹோட்டல் பால்கனியில் இருந்து குழாயை பிடித்து இறங்கும் போது, கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தில், போலீசார் மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' பெங்களூரு மேற்கு பிரிவு டி.சி.பி., பரசுராம் தெரிவித்தார்.
பெங்களூரு குந்தலஹள்ளியை சேர்ந்தவர் வைஷ்ணவி, 21. இவர், இரண்டு நாட்களுக்கு முன் தனது ஆண், பெண் நண்பர்கள் எட்டு பேருடன், எச்.இ.சி.எல்., லே - அவுட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்று, மூன்று அறைகள் எடுத்து தங்கினர். அனைவரும் இரவில் ஹோட்டல் பால்கனியில் நின்றபடி, அதிக சத்தத்துடன் பாடலை ஒலிபரப்பி நடனமாடினர்.
இதனால், அக்கம் பக்கத்தினர், ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஹோட்டலுக்கு சென்ற அவர்கள், வைஷ்ணவியின் நண்பர்களிடம் விசாரித்தனர். தன்னை விசாரணைக்கு அழைத்து சென்று விடுவர் என அஞ்சிய வைஷ்ணவி, பால்கனியில் இருந்து தரைத்தளத்திற்கு மழை நீர் குழாயை பிடித்தபடி கீழே இறங்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வைஷ்ணவியின் நண்பர்கள், 'மது அருந்தி விட்டு பால்கனியில் நடனமாடியது உண்மை தான். பின்னர் உறங்க சென்று விட்டோம். அதன்பின் வந்த போலீசார், எங்களிடம் பணம் கேட்டு மிரட்டினர்' என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மேற்கு பிரிவு டி.சி.பி., பரசுராம் கூறியதாவது:
ஹொய்சாலா போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ஹோட்டலுக்கு சென்றனர்.
அந்த நேரத்தில், நான்காவது மாடியில் உள்ள ஒரு அறையில், எட்டு பேர் இருந்தனர். போலீசார் தங்களின், 'பாடி கேமரா'க்களை இயக்கிய பின்னரே, அவர்களிடம் விசாரித்தனர். அவர்களின் அடையாள அட்டைகள், முகவரிகளை கேட்டனர். இரு இளைஞர்களை வரவேற்பு அறைக்கு அழைத்து சென்றனர்.
கூர்மையான கற்கள் இந்த நேரத்தில், அவர்களுடன் இருந்த ஒரு இளம் பெண், எதற்காக பால்கனியில் இருந்து கீழே இறங்கினார் என்று விசாரித்து வருகிறோம்.
மாணவி விழுந்த பகுதியில் கூர்மையான கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதனால், படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர்கள் கூறியபடி, போலீசார் பணம் கேட்டிருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரில், ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அத்துடன், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல், ஹோட்டல் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

