தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணிடம் அநாகரிகம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸ்

 பெண்ணிடம் அநாகரிகம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸ்

 பெண்ணிடம் அநாகரிகம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸ்


ADDED : மார் 04, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில், பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட, இரு ஆட்டோ டிரைவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில், கடந்த மாதம், 28ம் தேதி, ஆட்டோவில் பயணம் செய்ய முயன்ற பெண்ணிடம், அதிக பணம் கேட்டு இரண் டு ஆட்டோ டிரைவர்கள் அநாகரிகமாக பேசினர். பாதிக்கப்பட்ட பெண், கத்திரிகுப்பே செல்ல வேண்டும் என்று சொல்ல, ஆட்டோ டிரைவர், 700 ரூபாய் கேட்டுள்ளார்.

பொதுவாக, 150 ரூபாய் தந்து பயணிக்கும் இடத்திற்கு, 700 ரூபாய் கேட்பது அதிகம் என பெண் பயணி கூறியுள்ளார்.

உடன் ஆட்டோ டிரைவர்கள் இருவர் இணைந்து, அப்பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அநாகரிகமாக நடந்து கொண்டனர். இவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகின.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், உப்பர்பேட் போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். வீடியோவில் இருந்த இரண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என, எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்தது தொடர்பான படத்தை, சமூக வலைதளத்தில் போலீசார் பதிவேற்றி உள்ளனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆட்டோ டிரைவர்கள் படம், அபராத தொகை, பெயர் எதையும் வெளியிடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us