/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் வீட்டுவசதி கழகம் அருண் சக்ரவர்த்தி நியமனம்
/
போலீஸ் வீட்டுவசதி கழகம் அருண் சக்ரவர்த்தி நியமனம்
ADDED : ஜூலை 31, 2025 07:45 AM

பெங்களூரு : கர்நாடக போலீஸ் வீட்டுவசதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக டி.ஜி.பி.,யாக மூத்த ஐ.பி.எஸ்., அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரத்தின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருக்கும் அருண் சக்ரவர்த்தி, கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த ஐ.ஏ.எஸ்., இடமாற்றத்தில், காத்திருப் போர் பட்டியலில் இருந் த கங்குபாய் ரமேஷ் மனேகர், தொழிலாளர் நலத்துறையின் ஊழியர் காப்பீட்டு திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த உத்தரவில் திருத்தம் செய்து, தொழிலாளர் நலத் துறை ஊழியர் காப்பீட்டு திட்ட கமிஷனராக லோகண்டே சிநேகல் சுதாகரை, அரசு நேற்று நியமித்தது. கங்குபாய் ரமேஷ் மனேகர் மீண்டும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.