ருக்மிணி வசந்த் புகார் 'மெட்டா'வுக்கு போலீசார் கடிதம்
ருக்மிணி வசந்த் புகார் 'மெட்டா'வுக்கு போலீசார் கடிதம்
ADDED : ஜூன் 08, 2026 11:20 PM

பெங்களூரு: நடிகை ருக்மிணி வசந்த் பிகினி புகைப்பட வழக்கில், 'மெட்ட ா ' நிறுவனத்துக்கு, பெங்களூரு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
கன்னட திரையுலகில் இளம் நடிகையாக இருப்பவர் ருக்மிணி வசந்த், 29. தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராசி படத்தில் நடித்துள்ளார். இவர், 'பிகினி உடை' அணிந்து நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தன்னை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக, பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ருக்மிணி வசந்த் புகார் செய்தார்.
இந்த புகாரின்படி 29 சமூக வலைதள கணக்குகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த கணக்குகளை பயன்படுத்துவோர் பற்றிய விபரங்களை பெற மெட்டா நிறுவனத்துக்கு, சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
மெட்டா நிறுவனம் தகவல் கொடுத்த பின், வீடியோ பரப்பியவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
